--- --:--:-- --

திருச்சி பெல் நிறுவன கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

1

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பணப்பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை லாக்கரில் வைக்க ஊழியர்கள் முயன்றதாக தெரிகிறது.

 

ஆனால் லாக்கரை திறக்க முடியாததால் அலுவலகத்தில் இருந்த மேசை டிராயரில் பணத்தை வைத்து சென்றதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை வந்து பார்த்தபோது பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு மேசை டிராயரில் இருந்த ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

முகமூடி மற்றும் கையுறை அணிந்த நபர் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்தது சிசிடிவி மூலம் தெரியவந்தது. ஊழியர்கள் உட்பட யாருமே உரிய அனுமதியின்றி வளாகத்திற்குள் பெல் வளகாத்திற்குள் உள்நுழையவோ வெளியேறவோ முடியாது. உள்ளே நுழையும் போதும் வெளியே வரும் போதும் கடும் சோதனைகள் இருக்கும்.

 

அதை மீறி கொள்ளையன் உள்ளே வந்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணம் மேசை டிராயரில் வைக்கப்பட்டிருந்தது கொள்ளையனுக்கு தெரிந்தது எப்படி என்று வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon