மதுரையில் கீழடி கண்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கீழடியில் கடந்த 2017 முதல் நடைபெற்று நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

இதில் சுடுமண் சிற்பங்கள், மண்பானைகள், பவளம் மணிகள், விளையாட்டுப் பொருட்கள், உறைகிணறு, செங்கல் கட்டுமானங்கள், நீர் நிர்வாக வடிகாலமைப்பு உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தை நேரில் பார்ப்பது போன்ற ரியாலிட்டியுடன் கூடிய டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்கள் கவனத்தை கவரும் வகையில் இருந்துள்ளது.

கீழடியில் நிரந்தர அருங்காட்சியகம் கட்டும் வரை இந்த கண்காட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி தொல்பொருள் கண்காட்சியை பார்ப்பது சங்ககால மக்களின் வாழ்க்கை முறைக்கு சென்றது போல உள்ளது என்று அதனை பார்த்த மக்கள் பெருமிதத்துடன் கூறினர்.


Leave a Reply