சத்தியமங்கலம் அருகே இரவில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்குயனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் ஆட்டுக்குட்டியை இரவில் தூக்கிச்சென்ற சிறுத்தை ஆட்டின் வயிற்றுப் பகுதியை தின்றுவிட்டு முட்புதரில் போட்டுவிட்டு சென்றுள்ளது.
இதனை பார்த்த விவசாயிகள் சிறுத்தையின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர் மற்றும் சத்தியமங்கலம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.