ஈரோட்டில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்கும் கடையில் பொருட்களை திருடிய வழக்கறிஞர் மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த கடையில் பொருட்களின் இருப்பு சரிபார்க்கப்பட்ட போது சில பொருட்கள் குறைந்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது பொருட்கள் வாங்குவது போல வந்த இருவர் கடையில் இருந்து 16,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. கடை ஊழியருக்கு ஒருவர் போக்கு காட்ட மற்றொருவர் பொருட்களை திருடி பையில் போடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கறிஞரான கங்காதரன் மற்றும் அவரது மகன் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.