சாலையில் சென்ற பெண்களை, மதுபோதையில் தொந்தரவு செய்த நபர்
மதுரையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பெண்களிடம் மது போதையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மது போதையில் அரை நிர்வாணமாக இருந்த நபர் ஒருவர் சாலையில் சென்ற பள்ளி வாகனங்கள் மற்றும் பெண்களை தொந்தரவு செய்துள்ளார்.
அவரை தடுக்க சென்ற பெண் ஒருவரை அந்த நபர் தாக்கியதில் அந்தப்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது அதிகம் பரவி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கரிமேடு காவல் நிலைய போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்பாபு என்பது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




