கலர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
உடல் எடை குறைப்பு நிறுவனமான கலர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை அளிப்பதற்காக கலர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் ஏராளமான நடிகை, நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த ரகசிய தகவலையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 6 இடங்கள் கோவை, புதுச்சேரி வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் 8 இடங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




