அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்தால் இட ஒதுக்கீட்டில் சிக்கல் இல்லை – துணைவேந்தர் தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதால் இட ஒதுக்கீட்டில் சிக்கல் இருக்காது என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் ஜெர்மனி மேம்பாட்டு முகமை இணைந்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான சான்றிதழ்களை மாநில அரசிடம் வழங்கியுள்ளதாக கூறினார். இதனால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply