டெங்கு காய்ச்சல்: சென்னை பெரம்பூரில் சிறுவன் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை பெரம்பூரில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் பல்வேறு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை பெரம்பூரில் குணசேகரன் என்பவரது மகன்கள் அரவிந்தன், அருணாச்சலம் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதில் அரவிந்தன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அருணாசலத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Leave a Reply