தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .இந்த நிலையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை நிலவரங்கள், அணைகளின் நீர் மட்ட விவரங்கள் குறித்து கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.