--- --:--:-- --

விக்கிரவாண்டியில் தேமுதிக – பாமகவினரிடயே மோதல்!

1

விக்கிரவாண்டி வாக்கு சாவடியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய கல்யாணம் பூண்டி எனும் பகுதியில் காலையிலிருந்து வாக்குபதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வாக்குசாவடி காரில் வாக்களித்து விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்பவர் 100 மீட்டர் அருகாமையில் வருகின்ற போது அங்குள்ள பாமகவை சேர்ந்த நிர்வாகிகள் தவறுதலாக அவரிடம் வார்த்தைகளை பேசியதால் அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது.

 

இந்த கோபத்தினால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இவ்வாறு தாக்கி கொண்ட நிலையில் உடனடியாக காவலர்கள் அங்கு வந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் வாக்குவாதம் சற்றும் அதிகமாக இருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon