தஞ்சையில் ஓய்வு பெற்ற மருத்துவர் வீட்டில் கொள்ளை – சொகுசு காரையும் கொள்ளையர்கள் அபேஸ்

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் நெய்தல் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முருகவேல் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டனர். முருகவேல் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள் நுழைந்த அவர்கள் பீரோவில் இருந்த நகைகள், அரை கிலோ வெள்ளி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர்.

 

பின்னர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.இது அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply