திருவாடானனயில் இறந்தவரின் சொத்தை போலி ஆவணங்களை வைத்து பத்திரம் பதிவு செய்த நபரை கைது செய்தும், அதற்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவரது பாட்டி தனக்காயி இவர் 25 வருடத்திற்கு முன்பு இறந்து போய் விட்டார். இறந்து போன தனக்காயி என்பவருடைய சொத்தை அபகரிக்கும் நோக்கில் உயிருடன் இருப்பது போல் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்து இவர்தான் அவர் என திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் நம்ப வைக்க வாக்காளர் அடையாள அட்டை போலியாக தயார் செய்து அதை வைத்து பத்திரத்தை பதிவு செய்துவிட்டார்.
அந்த பத்திரத்தை வைத்து அப்போது கிடங்கூர் குருப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த இராமலிங்கம் என்பவரின் உடந்தையோடு பட்டா மாறுதல் உத்தரவிற்கு பரிந்துரை செய்து அதன் படி கிராம கணக்கு களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனிவாசனிற்கு தகவல் தெரிந்து போலியான நபர் மூலம் பத்திர பதிவு செய்து அந்த போலி ஆவனத்தை வைத்து பட்டா மாறுதல் செய்தது சம்மந்த மாக திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்-டம் புகார் மனு கொடுத்தார்.
அதன் பேரில் திருவாடாக க காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து ரவி என்ற ரவிச்சந்திரனை கைது செல்க கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கத்தை தேடி வருகிறார்கள். இந்த ரவி என்ற ரவிச்சந்திரன் சென்னை டெய்லர் ரவி என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருப்பதாக சொல்லப்படுகிறது.