செவ்வாய் செல்லும் ரோவர் விண்கலத்தில் உப்பூர் மாணவர்கள் 2 பேர் பெயர் பதிவு!

செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் 2020 ரோவர் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி மையம் (நாசா), ஜூலை 2020ல் அனுப்ப உள்ளது.

2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்குகிறது. இந்த விண்கலத்தில் தங்கள் பெயரை பொறிக்கும் வாய்ப்பை நாசா வழங்கியது. உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பெயர் பதிவு செய்தனர்.

இதில் இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தன்வயலை சேர்ந்த கா.பாலமுருகன் என்பவரது மகன்கள்  நிலநவசிகன் 13, (9ஆம் வகுப்பு, திகர்பூவன் 11, (7 ஆம் வகுப்பு) ஆகியோர் ரோவர் விண்கலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் திருவெற்றியூர்
நார்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply