அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை
தமிழ் இருக்கை அமைப்பதற்கான அனுமதியை ஹூஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. தமிழின் தொன்மை ,கலை, இலக்கியம், இலக்கணம் ,பண்பாடு உள்ளிட்ட ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வதற்கும் தமிழ் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தமிழ் இருக்கை பயன்படும் என பல்கலைக்கழகத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




