தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள வங்கியில் வாடிக்கையாளரின் பெயரில் போலி கையொப்பமிட்டு மோசடி நடந்திருப்பது தட அறிவியல் துறை ஆய்வில் அம்பலமாகியுள்ளது. பக்கம் பக்கமாக ஆவணங்களை வைத்து பல்வேறு விளக்கங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் இவர் ஸ்ரீரங்கநாச்சியார் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த வரும் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது நாச்சியாரின் விருப்பம்.
அதனால் மத்திய அரசின் பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பயிற்சியை நிறைவு செய்துள்ளார். அதன் மூலம் 2008 ஆம் ஆண்டு கருங்குளத்தில் உள்ள வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் உதவியும் கிடைத்திருக்கிறது. முப்பத்தாறு கவலைகளையும் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்தி கடமை அழித்த பின்னரும் நாச்சியாருக்கு மானியத்தொகை வந்து சேரவில்லை. ஆனால் அவர் எதிர்பாராத அதிர்ச்சி தகவல் நீதிமன்றத்தில் வீட்டிற்கு வந்தது.

2015ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கநாச்சியார் கடனுதவி கடிதத்தில் கையொப்பம் விட்டதாகவும் அதன்படி அவர்களும் 60,000 ரூபாயை செலுத்தவில்லை எனக் கூறி கருங்குளம் யூகோ வங்கி கிளை மேலாளர் வழக்கு தொடுத்து இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை வாங்கி நாச்சியார் அவற்றை சரி பார்த்துள்ளார். அப்போது அந்த கடிதத்தில் இருப்பது தனது கையொப்பம் இல்லை என்ற உண்மை அவருக்கு தெரிய வந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில் அந்த கடிதத்தில் இருப்பது ஸ்ரீரங்க நாச்சியாரின் கையொப்பம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.கையொப்பம் மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் பிபின் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார். நாச்சியார் மேலும் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார். நாச்சியாரை போலவே ஏராளமான நபர்களின் கையொப்பத்தை பயன்படுத்தி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






