ஒரே மேடையில் இளையராஜா, வைரமுத்து கருத்து மோதல்

இசைஞானி இளையராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்து ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு மீண்டும் ஒரு கருத்து மோதலுக்கு வித்திட்டுள்ளது. இன்றளவும் இசை பிரியர்களுக்கு திகட்டாத பாடல்களை தந்த ஜாம்பவான்கள் இளையராஜாவும் வைரமுத்துவும். அவர்கள் இருவரும் இணைந்து படைத்திட்ட பாடல்களுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது திரை இசைப் பாடல்களில் உச்சம் தொட்ட இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். ஆனால் ஏதேனும் ஒரு தருணத்தில் இணைய மாட்டார்களா என்ற ஏக்கம் திரை இசை ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

 

மனஸ்தாபங்கள், படங்களில் இணைந்து பணியாற்றுவதை தவிர்ப்பது, இவை தாண்டி பொது மேடைகளிலும் இருவரும் தவிர்த்து வந்தனர். தனித்தனியாக சாதித்து வந்த இருவரையும் இணைக்க திரைத்துறையைச் சேர்ந்த பலரும் முயற்சித்து அது நிறைவேறாமல் இருந்தது. சமீபத்தில் சுசீலா 65 என திரை இசைக்கு பிசுசீலா பணியாற்ற வந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்து அதற்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமா உலகில் வேறு திரவங்களால் இளையராஜா வைரமுத்து இருவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றனர்.

 

இளையராஜா வரும் பொழுது அவைகள் வைரமுத்து இருந்தால் அருகில் இருந்த அறையில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் மேடைக்கு நேரடியாக வந்தார். அதேவேளையில் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கினாரா இளையராஜா தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான் என்றும் டியூன் போட போட பாடல் வரிகளை எழுதும் திறமை மிக்கவர் என புகழ்ந்தார். அதன் பின்னர் மேலே ஏறிய வைரமுத்து நகரத்தை அழகாக உச்சரிக்கும் பாடகி சுசீலா என்பதால்தான் கண்ணுக்கு மை அழகு என்ற பாடலை அவரை கொண்டு பாட வைத்ததாக கூறினார்.

இந்த பாடல்வரிகளை மனிதன் படத்திற்காக எழுதப்பட்டது என்றும், ஆனால் பலமுறை ஆர்மோனிய பெட்டி மீது வைத்தும் இந்த வழிகள் உயிர் பெறாமல் இருந்ததாகவும் வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவை தாக்கினார்.தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் தான் என்று புகழ்ந்தார். வைரமுத்து ஒரே மேடையில் பங்கேற்ற இளையராஜாவும் வைரமுத்துவும் சிறந்த கவிஞர் கண்ணதாசன் என்றும் சிறந்த இசையமைப்பாளர் எம்எஸ்வி என்றும் புகழ் உரைத்தது இருவருக்கும் இடையேயான புகைச்சலை காட்டுவதாக இசை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இரு ஜாம்பவான்களுக்கு இடையே உள்ள விரிசல் நீங்காதே அவர்களுடைய வார்த்தைகளுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இருவருக்கும் உள்ள மனஸ்தாபத்தை இப்படி பொதுவெளியில் பேசுவது அவர்கள் மரியாதைக்கு சரியானது இல்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே இளையராஜா எஸ்பிபி இடையிலான காப்புரிமை சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இளையராஜா வைரமுத்துவின் பழைய சண்டை திரைஉலகில் மீண்டும் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.


Leave a Reply