இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உற்சாகமாக பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து இரண்டு மாத காலம் விருப்ப ஓய்வு கேட்டு பெற்ற தோனி ஓய்வு காலம் முடிந்த பின்னரும் இணையாமல் இருந்து வருகிறார்.
ஐபிஎல் மற்றும் உலக கோப்பை தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் இன்னும் இணைய விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தோனி உற்சாகமாக பில்லியர்ட்ஸ் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. தோனியின் சொந்த மாநிலத்தில் அமைந்துள்ள மாநில கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது இது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.