இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக இடைத்தேர்தலில் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதேபோல புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் ஆதரவு கேட்டிருப்பதாக கோரிக்கை வைத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை வந்த பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமர் மோடி இன்று சென்னை வந்திருந்தார். பிரதமர் மோடி இடம் அதிமுக தலைமை நேரடியாக அதிமுக வேட்பாளர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நரேந்திர மோடியிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் ஆதரவு கேட்டுள்ளனர்.
அது கடந்த சில நாட்களாகவே பல்வேறு விதமான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது. அதாவது அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை நாடவில்லை தொடர்ச்சியாக கடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணித் தலைவர்களை நேரடியாக அதிமுக தலைமை அமைச்சரை சந்தித்து வந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி களுடைய தலைவர்கள் யாரும் சந்திக்காமல் நேரடியாக ஆதரவை கேட்காமலும் இருந்து வந்தனர் என்று செய்தி தொடர்ச்சியாக வெளிவந்தது.
எனவே ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரடியாக சென்று தேமுதிக விஜயகாந்த், சரத்குமார் ஆகிய தலைவர்களை சந்தித்த பின்னர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சந்திக்கவில்லை நேற்று ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பிறகு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்தப் பாராட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர்கள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதுபோன்று பல்வேறு விதமான தொடர்ச்சியாக வெளியாகி வந்தன. இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.