3,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் போராட்டம்

விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்தக்கோரி திருநெல்வேலியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உபரி, பெருமணல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் நாட்டு படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர் இவர்கள் அதிக திறன் கொண்ட மோட்டார் மூலம் விசைப்படகுகளில் மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply