தவறான உறவால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தவறான உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாயை அதற்கு கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர். ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் சோலையம்மாள் தம்பதிக்கு கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கடந்த 14ம் தேதி பச்சிளம் குழந்தையுடன் சோலையம்மாள் மருத்துவமனையில் இருந்து மாயமானார்.

 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் சென்னையில் இருந்த சோலையம்மாவை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் சோலையம்மாளுக்கும் அவரது கணவரின் சகோதரர் குமாருக்கும் தவறான உறவு இருந்ததும் அந்த உறவின் மூலமாக இந்த குழந்தை பிறந்ததும் தெரியவந்தது.

 

இதனால் அந்த குழந்தையை சோலை அம்மாவும் பாபுவும் சேர்ந்து கொலை செய்து ஒரு கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைத்தது தெரிய வந்தது. குழந்தை புதைக்கப்பட்ட இடத்திலிருந்து நாளை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply