சுபஸ்ரீ என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ என்று கூறிய நடிகர் விஜய்யின் தந்தை

நடிகர் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது சுபஸ்ரீ என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார் என அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவரும் பில்லா ஜெகன் என்பவர் விபத்தில் சிக்கி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 

அடுத்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சமூக சிந்தனையோடு சில கருத்துக்களை தெரிவிக்கிறோம் அதற்காக விஜய் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைக்கவில்லை என்றார்.


Leave a Reply