அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முறையை கால்நடை மருத்துவர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்று மேற்கொள்வார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். திருப்பூரில் புதிய ஏழு பேருந்துகளை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி கோவை பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கால்நடைகளின் இருப்பிடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கால்நடை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply