பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது 2 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்

தூத்துக்குடி அருகே முன்னால் சென்ற ஆம்னி பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த மினி லாரியுடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தசரா திருவிழாவிற்கு மாலை அணிவிக்க சென்ற இரு மாணவர்கள் உயிர் இழந்தனர். தூத்துக்குடி சாந்தி நகரை சேர்ந்த மாணவர்கள் மணிசங்கர், அஜீத் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மூன்று இருசக்கர வாகனத்தில் தசரா திருவிழாவிற்கு மாலை அறிவிப்பதற்காக குலசேகரப்பட்டினம் சென்றுகொண்டிருந்தனர்.

 

ஆறுமுகநேரி அருகே முன்னால் சென்ற ஆம்னி பேருந்து மணிசங்கர் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்ல முயன்றுள்ளார். அது இரு வழி சாலை என்பதால் அப்போது எதிரே வந்த மினி லாரியுடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் மணிசங்கர் சம்பவ இடத்திலேயே பலத்த அடிபட்டு இறந்தார். அவருக்குப் பின்னால் அமர்ந்து இருந்தால் ஜெய் படுகாயத்துடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்று இருவழி சாலையில் எதிரே வருவதை கவனித்த பிறகுதான் செல்ல வேண்டுமென்று போக்குவரத்து விதியை கடைபிடித்து இருந்தால் விபத்தை தவிர்க்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply