கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இடவசதியை விரைந்து உருவாக்கித் தரவேண்டும்
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு இடவசதியை விரைந்து உருவாக்கித் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கீழடிக்கு நேற்று சென்று பார்வையிட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தொல்லியல் ஆய்வாளர் ஆசைதம்பி ஆகியோரின் உதவியுடன் கீழடி ஆய்வுகளின் சிறப்புகளை அறிய முடிந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பான நகர நாகரிகத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததை காண முடிந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டு இருப்பதாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் அதற்கான இடம் வசதியை மாநில அரசு விரைவில் உருவாக்கி தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளை அவர்கள் வெளியிட வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




