கேப் வெர்டே கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய 134 திமிங்கலங்கள்

கேப் வெற்றி கடற்பகுதியில் 134 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஆழ்கடல் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய உயிரைவிட்ட காட்சிகள்தான்.ஒன்று இரண்டு அல்ல 134 திமிங்கலங்கள் அடுத்தடுத்து சில மணி நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரத்தில் உள்ள போஸ்ட் தீவுப்பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

வழக்கம்போல் கடற்கரை பகுதிக்கு சென்று அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறிய திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் எந்த முயற்சியும் பலனளிக்காமல் அனைத்து திமிங்கலங்களும் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் திமிங்கலங்களின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உடற்கூறு ஆய்விற்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியும் என்றும் கூறினார்.

 

இருப்பினும் உடல்நிலை குறைபாடுகளுடன் ஏற்பட்ட மோதல் மோசமான வானிலை வழிதெரியாமல் கரை உதவுதல் போன்ற காரணங்களால் திமிங்கலங்கள் இருந்திருக்கலாம் என்று காரணத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்த திமிங்கலங்கள் உலகிற்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும் பருவ நிலை மாற்றம் குறித்த பேச்சுகள் உலகம் முழுவதும் பரவி வந்த நிலையில் திமிங்கலங்களின் இழப்பு உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.


Leave a Reply