தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா ஒரு மனதாக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

 

அறிக்கை வெளியிட்டுள்ள ரூபா சேப்பாக்கம் மைதானத்தில் சீல் வைக்கப்பட்டுள்ள ஐஜேகே ஆகிய மூன்று கேலரிகளை திறக்க நடவடிக்கை எடுப்பதுதான் தனது முதல் பணியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஊழலை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம் எனவும் ஊழல் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply