‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை கையிலெடுத்த விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜயின் பேச்சு வேத வாக்காக கருதி சமூக பிரச்சினைகளை வலைத்தளத்தில் பேசுபொருளாக வருகிறது. விஜய் ரசிகர் பட்டாளம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கும் ஹேஷ்டேக். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் முன்பே பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்மையில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய் பேனர் விழுந்ததால் சாலை விபத்தில் பலியான சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்து கொள்வதாக மறைமுகமாக சாடினார். மேலும் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக அமையும் என பஞ்ச் டயலாக் பேசுவது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே மேடையில் வலைத்தளங்களில் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் ஹேஷ்டேக்குகளை உருவாக்குமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நடிகர் விஜய்யின் அழைப்பை ஏற்று சுபஸ்ரீ விவகாரத்தையும், கீழடி அகழாய்வு போன்ற சமூக நிகழ்வுகளையும் ஜஸ்டிஸ் ஃபார் சுபஸ்ரீ, கீழ டி தமிழ் சிவிலைஷேஷன் போன்ற ஹேஸ்டேக்கு களையும் டுவிட்டரில் உருவாக்கிய விவாதப் பொருள் ஆகியுள்ளன அவரது ரசிகர்கள்.

 

இந்நிலையில் தேனி நியூட்ரினோ திட்டத்தையும் சேம் தேனி நியூட்ரினோ என்ற ஹேஷ்டேக் உருவாக்கி தற்போது ட்ரெண்டாகி வருகிறது. தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தின் மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வளத்தை காக்க வலியுறுத்தியும் விஜய் ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply