அகில இந்திய N.R. காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக அதிமுக அலுவலகம் வந்த அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் அறிவிப்பை அதிமுக வெளியிட்டது.


Leave a Reply