குழந்தையின் உடலில் பட்டால் பல்ப் எரியும் அதிசயம்

ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தை தொட்டால் பல்பு எரிவதால் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அந்த மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு, சுஷ்மிதா. இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தையின் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதாக அதன் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தது.

 

இந்நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அங்கிருந்த எல்இடி பல்பு கையிலெடுத்தது. அப்போது திடீரென பளிச்சிட்டது. இதனை கண்டதும் குழந்தை பதறி அழுதது. அங்கு சென்று ஹரிபாபு, சுஷ்மிதா குழந்தை அந்த பல்பை எடுத்து மீண்டும் குழந்தை மீது வைத்த போது மீண்டும் எரிந்தது. உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உடலில் மின்சாரம் இருப்பதாக தெரிவித்தனர்.

 

மனித உடலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மின்சாரம் இருக்கும் என்றும் அதில் இக்குழந்தைக்கு கூடுதலாக இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபோல் அச்சத்தில் கோடியில் ஒருவருக்கு இருக்கும் என்றும் இதனால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறினர். தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது இதனால் சுற்றுப்புற கிராம மக்கள் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Leave a Reply