அக்டோபர் 10 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்-சீதாராம் யெச்சூரி
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் 10 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க இடதுசாரிகளால் மட்டுமே முடியும் எனக் கூறினார்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக்கவும் தான் இந்த கொள்ளைகள். அன்னிய முதலீடுகள் பணக்காரர்களை செல்வச் செழிப்பாக உள்ளது. எனவேதான் அனைத்து இடதுசாரி அமைப்புகளுடனும் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை தொடங்க உள்ளது என்றும் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




