திருப்பூரில் ஆர்டர் கிடைக்காத விரக்தியில் பனியன் கம்பெனி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை!!

திருப்பூர் காங்கயம் ரோடு கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன் (37). ராக்கியாபாளையம் பிரிவு அருகே குத்தகை அடிப்படையில் பனியன் கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில் சரியாக ஆர்டர்கள் வராததால் கடன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தீபாவளி ப்பண்டிகைக்கான ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஆர்டர்கள் ஏதும் கிடைக்கவில்லை . இதனால் மன உளைச்சலுக்கு ஆளான காஜா உசேன் கடந்த சில நாட்களாக வருத்தமுடன் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பனியன் கம்பெனிக்கு வந்த அவர் வீடு திரும்பவில்லை. காஜா உசேன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவருக்கு போன் செய்தனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து காஜா உசேனின் மனைவி மற்றும் உறவினர்கள் கம்பெனிக்கு சென்று பார்த்தபோது அங்கு காஜா உசேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

இது குறித்து தகவலறிந்த நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Reply