மக்களிடையே பொருட்கள் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி தருவதாகும் இதன்மூலம் அடுத்த 6 மாதங்களில் பொருளாதாரம் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்திருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் வங்கி அதிகாரிகளை சந்தித்த பிறகு அவர் தெரிவித்தார். தற்போது வங்கிகளிடம் பலபலக்க பிரச்சினை ஏதும் இல்லை என்றும் இந்த சந்திப்பின் போது அவர்களிடமிருந்து திருப்தி தரும் தகவல்கள் தனக்கு கிடைத்ததாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களிடையே அதிகரித்து வரும் பணப்புழக்கம் அவர்கள் அதிக அளவில் செலவிட ஆரம்பித்திருப்பது பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்க நிலை முடிவுக்கு வருவதாக காட்டுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் வரும் பண்டிகை காலத்தில் பொருளாதார தொடர்புகள் விரிவடையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.