திருப்பூரில் 450 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பந்தாட்டம்! மாவட்ட எஸ்பி அதிரடி..!

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஆகஸ்ட் 17 முதல் திஷாமிட்டல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் பெறுப்பேற்ற நாள்முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.

 

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாரின் விவரம், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில்ப ணியாற்றுபவர்கள், புகார்களில் சிக்கியவர்கள், விருப்ப மாறுதல் கேட்டவர்கள் ஆகியோரின் பட்டியல் தயாரிக்குமாறு தனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

 

அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மதுவிலக்கு, உள்ளிட்டவர்களின் பட்டியல் தயாரித்து எஸ்.பி.க்கு வழங்கப்பட்டது. பட்டியலின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் 450 க்கும் மேற்பட்ட போலீசாரை அதிரடியாக இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

 

இதில் அதிக புகார்களில் சிக்கிய போலீசார் வேறு சப்-டிவிசனுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் போலீசார் மத்தியில் புயலை கிளப்பி உள்ளது.


Leave a Reply