பிரதமர் நரேந்திரமோடிக்கு உலகின் கோல்கீப்பர் விருது

தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உலகின் கோல்கீப்பர் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

அப்போது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் சார்பில் மோடிக்கு உலகின் கோல்கீப்பர் எனும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வழங்கினார். அப்போது பேசிய மோடி இந்த கௌரவம் தனக்காக அல்ல என்றும் கனவை நனவாக்கிய 130 கோடி இந்திய மக்களுக்கானது என்றும் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவில் இந்த விருது வழங்கப் பட்டிருப்பது தனிப்பட்ட முறையில் தனக்கு மிக முக்கியமானது என்று மோடி குறிப்பிட்டார்.

 

130 கோடி மனித ஆற்றல் கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்பதற்கான உதாரணம் இன்று பேசிய மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் அதிகம் பயன் அடைந்தது பெண்கள்தான் என்றும் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.


Leave a Reply