ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய போலீசார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றிவிட வீடியோ வெளியாகியுள்ளது. ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ரயில் புறப்பட்ட பின்பும் உயர்மட்ட நடை மேம்பாலத்தில் கடைசி படிகளில் வேகமாக இறங்கி வந்த பையன் வேகம் எடுத்த ரயிலில் ஏற முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஆனால் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார். டிராக்கில் கம்பியைப் பிடித்து தொங்கிய வரை சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் இருவர் கணமும் தாமதிக்காமல் அவரை பிடித்து தூக்கி ரயிலுக்குள் தள்ளிவிட்டனர்.


Leave a Reply