--- --:--:-- --

நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் திடீர் ஆதரவு

201907150839129371_KS-Alagiri-request-Rajinikanth-do-not-come-to-politics_SECVPF

பிகில் திரைப்பட நிகழ்ச்சி தொடர்பாக சென்னை தனியார் கல்லூரி கலைக்கப்பட்ட நோட்டிஸ் பெற தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

 

அவரின் அரசியல் கருத்துக்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலர் அவருக்கு எதிராகவும் பேசி இருந்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு தனியார் கல்லூரியில் இம்மாதிரியான இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்று தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை திரும்பப் பெறவேண்டும் என்று தற்போது காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தமிழ் திரைப்பட உலகினரால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயின் இசை வெளியீட்டு விழா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மீசை பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தமிழக அரசின் மீது தான் அவர் அந்த கருத்துக்களை தெரிவித்து இருந்தார் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நோக்கத்தின் காரணமாக அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

 

இந்த நோட்டீசை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேஎஸ் அழகிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பாகவே பல இடங்களில் சட்ட கல்லூரிகளில் எல்லாம் இதற்கு முன்பாக இருந்த தலைவர்கள் பலர் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசியல் கருத்துக்களை பேசி யிருந்தனர். அப்போதெல்லாம் இது போன்ற அறிக்கைகளை அல்லது இம்மாதிரியான நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon