ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய போலீசார்!

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

 

விமானத்திலிருந்து இறங்கிய சிராஜ் தீன் மற்றும் சாதிக் ஆகிய இரு பயணிகளை சோதனையிட்ட போது அவர்களது பைகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய லேப்டாப்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பதற்றத்துடன் நின்றிருந்த இருவரையும் அதிகாரிகள் தனியே அழைத்து சோதனையிட்டபோது இருவரும் மலக்குடலில் வைத்து 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதேபோல் துபாயில் இருந்து ஏர் இந்தியா மூலம் சென்னை வந்திறங்கிய அஜ்மல் கான் என்பவரை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் பேண்ட் பாக்கெட்டில் 48 கிராம் எடையிலான தங்க கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .தீவிர சோதனையில் அவரும் மலக்குடலில் மறைத்து 460 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.


Leave a Reply