சிறுமிகளை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரன்

சென்னையில் சிறுமிகளை குறி வைத்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கொடூர நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாதவரம் பகுதியில் 10 வயது சிறுமியை ஒருவர் கடத்த முயன்றதாக சிறுமியின் பெற்றோர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

 

மாதவரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்ற அந்த நபர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முரளியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply