--- --:--:-- --

பஞ்சாமிர்தம் கொடுத்து கணவரை கொலை செஞ்சுட்டாங்க!

6

சென்னையில் பஞ்சாமிர்தத்தில் வேதிப்பொருளை கலந்து கொடுத்து ஒருவரை கொலை செய்த புகாரின் உணவு பாதுகாப்பு துறை ஆய்வக உதவியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த கார்த்திக் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அரசு வேலாயுதம் என்பவரிடம் மூன்று லட்சம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.

 

ஆனால் பேசியபடி வேலாயுதம் அரசு வேலை வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் பொறுமை இழந்த நிலையில் அவருக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் அதற்கான பணியை வந்து பெற்றுக்கொள்ளப்படும் வேலாயுதம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நகரில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு தனது மனைவி சரண்யாவுடன் கார்த்திக் சென்றுள்ளார்.

நியமன ஆணையைப் பெற்றுக் கொள்ளும் முன் சாய்பாபா கோவில் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி இருக்கும் வேலாயுதம் பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட உடனே மயங்கி விழுந்து விட்டனர். இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கார்த்திக் உயிரிழந்தது தெரியவந்தது .

சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் வேலாயுதத்தை கைது செய்தனர் அவர் பஞ்சாமிர்தத்தில் சல்பியூரிக் பொடியை கலந்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon