லஞ்சம் கொடுத்தால் தான் ஆவணம் – போக்குவரத்து கண்காணிப்பாளர்

மதுரையில் லஞ்சம் கொடுத்தால்தான் ஆவணங்கள் தரப்படும் என வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் தெரிவிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மதுரை மேலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் கிளையின் தமிழ்ச்செல்வி என்பவர் வட்டாரப் போக்குவரத்து கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் செல்வியிடம் இருசக்கர வாகனத்தை பதிவு செய்ய வந்தவரிடம் அவர் 200 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply