இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட போஸ்டர். கண்டனம் தெரிவித்து நடிகர் விஜயின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட போஸ்டர் வெளியிட்டதாக கூறி நடிகர் விஜயின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட புகைப்படங்களை கிழித்து போராட்டம் நடத்தினர். பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் முட்டி மற்றும் கத்தி மீது செருப்புக்கால் வைத்திருப்பது தங்களது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் நியாயப்படுத்தி பதிலளித்து இருப்பதாகவும், இசை வெளியீட்டு விழாவில் தமிழக அரசிற்கு அறிவுரை கூறும் அளவிற்கு நடிகர் விஜய்க்கு தகுதியில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும்,இறைச்சி வியாபாரிகளை இழிவுப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், இல்லையெனில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமெனவும் கூறிய இறைச்சி வியாபாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.


Leave a Reply