நிதி அமைச்சகத்தை தனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதாக சிபிஐ சுமத்திய குற்றச்சாட்டை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மறுத்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிதம்பரத்திற்கு ஜாமீன் தர சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு விரிவான விளக்கத்தை சிதம்பரம் தரப்பு சமர்ப்பித்துள்ளது.
தான் வெளிநாடு தப்பிச் செல்வேன் என்பது முற்றிலும் தவறு என்றும் தான் பொறுப்புள்ள குடிமகன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் விளக்கத்தில் கோரப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.