வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நான்கு வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளரிடம் முறையிட்டதாக சங்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோரிக்கைகளை பரிசீலிப்பது குறித்து குழு ஒன்று அமைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் உறுதி அளித்ததாகவும், இதனால் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply