பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபாதை பிரச்சனையில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லிநகரம் கிராம பஞ்சாயத்து சேர்ந்தவர் ஜெயராமன் அவர் பல ஆண்டுகளாக இவர் குடியிருந்து வரும் வீட்டிற்கு செல்லும் பாதையை மறித்து கடந்த 2006 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக இருந்த மோகன் என்பவர் சுவர் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான வழக்கில் சுவரை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் மோகன் சுவற்றை அகற்றாமல் மேல்முறையீடு செய்துள்ளார். பிரச்சினைக்குரிய இடத்தில் மின் மோட்டார் பொருத்தி சென்ற பஞ்சாயத்து செயலாளர் ஜெயராமன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஜெயராமனின் மனைவி தங்கம்மாள், தாயார் பூங்கொடி ஆகியோர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த பூங்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். தங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






