இராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை
தந்த மக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கை மனுக்கள் பெற்று அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள்,பயனாளி ஒருவருக்கு ஒளி உருப்பெருக்கி, பயனாளி ஒருவருக்கு பிரெய்லி கைக்கடிகாரத்தை வழங்கினார்.

 

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளி ஒருவருக்கு விலையில்லா தையல் இயந்திரத்தை முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு வாரிசுதாரர் திருமண உதவித்தொகையாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கான காசோலை, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்திற்கான காசோலைகள், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, தனித்துணை ஆட்சியர் எஸ்.சிவசங்கரன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply