நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட இரு குடிமகன்கள்

பெரியகுளம் அருகே குடிபோதையில் இருவர் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேவதானப்பட்டி யைச் சேர்ந்த இருவர் குடிபோதையில் சாலையில் சுற்றித்திரிந்து உள்ளனர். போதை தலைக்கேறி அவர்கள் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே சாவகாசமாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply