அத்திவரதர் வைபவம்: ஆர்..டி.ஐ மனு – பதில் தர மறுத்த கோவில் நிர்வாகம்

அத்தி வரதர் வைபவம் தொடர்பான ஆர்.டி.ஐ மனு மக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில் 48 நாட்களும் அத்திவரதர் அணிந்திருந்த ஆடை கோவில் நிதி மூலம் வாங்கப்பட்ட.தா? அல்லது உபயதாரர் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தால் அதற்கான ரசீது நகல் கோரி இருந்தார். அத்திவரதர் காண்பிக்கப்பட்ட பட்டாடைகள் யார் வசம் உள்ளன.

 

அவரது அலங்காரத்திற்காக உபயதாரர்கள் இடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை ரசீது விபரங்களையும் டில்லிபாபு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கோவில் நிர்வாகம் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் மனுதாரர் கோரிய ரசீது நகல்களையும் கட்டண விபரங்களையும் தெரிவிப்பதில் கவனம் செலுத்தினால் நிறுவனத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படும் என்றும் அதனால் விவரங்கள் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

 

மேலும் அத்திவரதர் வைபவத்திற்காக எவ்வளவு விஐபி பாஸ்கல் அச்சடித்து வழங்கப்பட்டன என்று கேள்விகள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக கேட்கப்பட்டு இருப்பதால் அதற்கான விவரங்களை வழங்க சட்டத்தில் வழிவகை இல்லை எனவும் டில்லி பாபுவின் மனுவிற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு டோனர் பாஸில் அச்சடிக்கப்பட்டன பட்டு மற்றும் ஜவுளி கடைகளுக்கு எவ்வளவு பாஸ்கல் வழங்கப்பட்டன என்ற கேள்விக்கும் விவரம் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் அத்தி வரதர் வைபவத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் அவற்றில் ஐந்து பேர் உடல்கள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .மேலும் கூட்ட நெரிசலில் 250 பேர் மயக்கம் அடைந்ததாகவும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.


Leave a Reply