இங்க்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை எறும்பு கடித்து இருப்பதாகக் கூறி உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். கடலூரைச் சேர்ந்த வாசுதேவன் அலமேலு தம்பதியினருக்கு 18 ஆம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

அங்கு இன்குபேட்டர் கருவிகள் மருத்துவர்கள் குழந்தையை வைத்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் காலையில் குழந்தையை பார்த்து அலமேலு குழந்தையின் உடல் பாகங்களில் எறும்புகள் கடித்து வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த நேரம் அங்கு வந்த வாசுதேவன் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடிகளை கைகளால் உடைத்துள்ளார்..

தகவலறிந்து வந்த போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இங்கு போருக்கு செல்லும் குளுக்கோஸ் குழாயில் தவறுதலாக எலும்புகள் உடைந்து விட்டதாகவும் அதனால் ஆபத்து இல்லை என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply