சிறுவர், சிறுமிகளை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது கனடா பெண் புகார்

நித்யானந்தா சிறுவர் சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டி அவரது முன்னாள் சிஷ்யர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா என்னும் பெண் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து தான் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய் என பிறகுதான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தான் சென்றிருந்தபோது அங்கிருந்த சிறுவர்கள் சிலர் தன்னை சந்தித்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர் என அவர் தெரிவித்தார்.

ஆசிரமத்தில் உள்ளவர்களால் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படிக்கிறோம் எனவும் கோரிக்கை கழிவறைக்கு கூட செல்ல தங்களுக்கு அனுமதி இல்லை எனவும் இரும்பு கம்பிகள் நிறைந்த அறையில் தாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ள எனவும் அந்த சிறுவர்கள் தன்னிடம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

நித்யானந்தா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பின்பு சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதாக சாரா தெரிவித்தார். ஆனால் நித்யானந்தாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக நித்யானந்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply