பட்டாசு வெடிப்பதையும் திமுகவினர் தவிர்க்க வேண்டும்

பேனர்கள், கட் அவுட்டுகள் வைப்பதை தவிர்ப்பது போல் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுமென திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

 

இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேனர்கள் வைப்பது திமுக தவிர்த்து வருவதாக தெரிவித்தார். பேனர்களை தவிர்ப்பது போல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Reply